வத்தலகுண்டில் செல்போன் பறித்த 2 வாலிபர்களை தொழில்நுட்பம் உதவியுடன் கைது செய்த போலீசார்

X
Dindigul King 24x7 |22 Dec 2025 8:43 AM ISTதிண்டுக்கல் வத்தலகுண்டு
திண்டுக்கல், வத்தலகுண்டு, பிலீஸ்புரத்தை சேர்ந்த குருநாதன்(23) இவர் பெரியகுளம் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகே தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த 2 பேர் அவசரமாக பேச வேண்டும் என்று குருநாதனின் செல்போனை வாங்கி பேசுவது போல் நடித்து அங்கிருந்து ஓடிவிட்டனர். இதுகுறித்து குருநாதன் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வத்தலக்குண்டு போலீசார் தொழில்நுட்பம் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட காந்திநகரை சேர்ந்த ராஜேஷ்(39), விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த கணேசன்(38) ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
Next Story
