வேடசந்தூர் பைபாஸ் பகுதியில் லாரிகளில் தொடர் டீசல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது- சரக்கு வாகனம் பறிமுதல்

வேடசந்தூர் பைபாஸ் பகுதியில் லாரிகளில் தொடர் டீசல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது- சரக்கு வாகனம் பறிமுதல்
X
Dindigul
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சத்திரப்பட்டி பைபாஸ் பகுதியில் கடவூரை சேர்ந்த குணசேகரன்(41) என்பவர் தூத்துக்குடியில் இருந்து லாரியில் சுண்ணாம்புக்கல் ஏற்றிக்கொண்டு கரூர் சென்று கொண்டிருந்த போது ஓய்வு எடுப்பதற்காக லாரியை நிறுத்தி இருந்தார். அப்போது மர்ம நபர்கள் லாரியில் இருந்த 400 லிட்டர் டீசலை திருடி சென்றது தொடர்பாக வேடசந்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வேடசந்தூர் சார்பு ஆய்வாளர்கள் பாலசுப்ரமணியன், ஜெயலட்சுமி மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நிலக்கோட்டை, விளாம்பட்டியை சேர்ந்த ஜெயராஜ்(43), ஆவாரம்பட்டியை சேர்ந்த முத்துக்குமார்(30) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய பிக்கப் வேனை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
Next Story