தோகைமலையில் கணக்கில் வராத பணத்தை கொண்டு வந்த 2 பேர் கைது,

ரொக்கபணம் ரூ.10,93,900 மற்றும் ஒரு சிப்ட் கார் பறிமுதல் செய்த தோகைமலை போலீசார்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை காவல்நிலைய எஸ்ஐ பாலசுப்பிரமணி தோகைமலையில் உள்ள பாளையம் பிரிவு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்து உள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு சிப்ட் காரை நிறுத்தி ஆய்வு செய்தபோது ஒரு கட்டை பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்து உள்ளது. சந்தேகம் அடைந்த எஸ்ஐ பாலசுப்பிரமணியன் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்ல முற்பட்டபோது இருவரும் எஸ்ஐ பாலசுப்பிரமணியனை தகாத வார்த்தைகளால் திட்டி காரை விடுமாறு தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து காருடன் இருவரையும் மடிக்கிபிடித்து காவல்நிலையம் கொண்டு வந்துள்ளார். விசாரணையில் சென்னை குன்றத்தூர் நேதாஜி நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சுனில்குமார் (51) மற்றும் கரூர் அருகே நெரூர் புதுப்பாளையத்தை சேர்ந்த டிரைவர் வேலை செய்து வரும் யோகராஜ் (எ) பிரதாப் (41) என்பது தெரிய வந்துள்ளது. பணம் குறித்து விசாரித்தபோதும் எந்த பதிலும் கூறாமல் இருந்து உள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்த ரூ.10,93,900 ரொக்கப்பணத்துடன், சிப்ட் காரை பறிமுதல் செய்தனர். மேலும் இருவர் மீது வழக்கு பதிந்த தோகைமலை போலீசார் இருவரையும் கைது செய்தனர். இருவர் மீதும் காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தோகைமலை பகுதியில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் கட்டுக்கட்டாக சொகுசு காரில் கடத்தி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story