திருச்செங்கோடு அடுத்துள்ள உஞ்சனைப் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது 1கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்

திருச்செங்கோடு அடுத்துள்ள உஞ்சனைப் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது 1கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் மதுவிலக்கு அமுல் பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை
திருச்செங்கோடு அருகே உஞ்சனை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சேலத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ​நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்செங்கோடு அடுத்துள்ள உஞ்சனை பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமானவகையில் நின்றுகொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். ​விசாரணையில் அவர்கள் 2 பேரும் சேலத்தை சேர்ந்த ராகுல் மற்றும் ஜீவா என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் மோளிப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்ததும், அங்கு பணியாற்றும் ஒடிசா மாநிலத்தவர்களுடன் இணைந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப் பட்டது. ​இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துநீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சங்ககிரி கிளைச் சிறையில் அடைத்தனர்.
Next Story