திருநெல்வேலியில் கை துப்பாக்கி விற்பனை செய்த விவகாரம் - திண்டுக்கல்லை சேர்ந்த 2 வாலிபர்கள் உட்பட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

X
Dindigul King 24x7 |25 Jan 2026 12:19 PM ISTDindigul
திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் நாட்டு கை துப்பாக்கியை திண்டுக்கல்லை சேர்ந்த நபருக்கு விற்பனை செய்த வழக்கில் மேலப்பாளையம் போலீசார் ரத்தினபாலன், அமீர்சுகைல், முஸ்ஸமில் முர்சித் திண்டுக்கல்லை சேர்ந்த கொலை வழக்குகள் உள்ளிட்டவற்றில் தொடர்புடைய சாகுல்அமீது, சிக்கந்தர் சேக் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் அவர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து மேலப்பாளையம் போலீசார் 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்
Next Story
