குமாரபாளையத்தில் 2000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

X
Komarapalayam King 24x7 |13 Nov 2025 9:42 PM ISTநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தமிழ் சிந்தனைப் பேரவை, தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை,அன்னை ஜே கே கே சம்பூர்ணியம்மாள் மருந்தியல் கல்லூரி இணைந்து எதிர் மேடு மேட்டூர் கிளை வாய்க்கால் கரையோரம் 2000 Sang விதைகளை நட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தமிழ் சிந்தனைப் பேரவை, தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை,அன்னை ஜே கே கே சம்பூர்ணியம்மாள் மருந்தியல் கல்லூரி இணைந்து எதிர் மேடு மேட்டூர் கிளை வாய்க்கால் கரையோரம் 2000 பனை விதைகளை நட்டனர். பனை விதை நடும் நிகழ்விற்கு குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைமைப் பொறியாளர் செல்வகணபதி அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ் சிந்தனைப் பேரவைத் தலைவர் இரமேஷ் குமார் பனையின் மகத்துவம் பற்றி சிறப்புரை ஆற்றி விழாவிற்கு அனைவரையும் வரவேற்றார். அன்னை ஜே கே கே சம்பூரணியம்மாள் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை தலைவர் ஸ்ரீனிவாசன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் காவல் உதவி ஆய்வாளர் நடராஜன்,ஜே கே கே சம்பூர்ணியம்மாள் மருந்தியல் கல்லூரி பேராசிரியர்கள் சதீஷ்குமார், ஷேக் அலிஷா, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ரிஸ்வானா பேகம், பூவரசு, கலையமுதன்,குமாரபாளையம் ஜவுளி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஜி கே பிரபாகரன், சேகர் ஜுவல்லரி தனசேகரன், செந்தில் ஜுவல்லரி செந்தில்குமார், ஜே கே கே முனி ராஜா பள்ளி முதல்வர் அர்ச்சனா, கோபி ராவ், அன்பழகன், சித்ரா பாபு ஆகியோர் கலந்துகொண்டு பனை விதைகளை நட்டு சிறப்பித்தனர்.
Next Story
