கள்ளக்குறிச்சி மாவட்டம்: சங்கராபுரம் 20,000 ஏக்கர் சம்பா சாகுபடி, வேளாண் அதிகாரி ஆனந்தன் தகவல்....

X
Aathi King 24x7 |22 Dec 2025 7:46 AM ISTசங்கராபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஆற்று பாசனம், ஏரி பாசனம், கிணற்று பாசனம் மூலம் மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஆற்று பாசனம், ஏரி பாசனம், கிணற்று பாசனம் மூலம் மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சங்கராபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக ஏரி, கிணறு உள்ளிட்ட நீர் நிலைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடியை துவக்கியுள்ளனர். சங்கராபுரம் வட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளதாக வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
Next Story
