ஆட்சி மாற்றம் என்ற குரல் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு.
NAMAKKAL KING 24X7 B |5 Nov 2025 7:22 PM ISTதமிழக மக்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு ஏற்றுக்கொண்டு மக்களை பாதிக்காத வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், ஆட்சி மாற்றம் என்ற குரல் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றும்,
நாமக்கல் மாவட்டம், ஊனங்கல்பட்டி கிராமத்தில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டம், விவசாயிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி. நாமக்கல் மாவட்டத்தில் 2-வது நாளாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் ஊனங்கல்பட்டி பகுதியில், பாஜக சார்பில் கிராம சபை கூட்டம் மற்றும் விவசாயிகளோடு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு, இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், வளையப்பட்டி பகுதியில் விளைநிலங்களில் சிப்காட் அமைக்க கூடாது, தமிழகத்தில் தேசிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.,இயற்கை வேளாண்மையை நாடு முழுவதும் பரவலாக்க வேண்டும்., பழைய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.மரவள்ளி பயிருக்கு மரவள்ளி கிழங்கு உரிய விலை கண்ணுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்., மோகனூர் ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்., 505 ஏக்கர் பரப்பளவில் உள்ள நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு, தோல் பதனிடம் தொழிற்சாலை மற்றும் சிறைச்சாலை அமைக்க கூடாது., நாமக்கல் மாநகராட்சி, வடக்கால புதூர் பகுதியில் கழிவுநீர் கொட்டுவதை தடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்-இடம் எடுத்துக் கூறினர். மேலும் விவசாயிகள் இது குறித்து அளித்த கோரிக்கை மனுக்களையும் நைனார் நாகேந்திரன் பெற்றுக்கொண்டார். அப்போது விவசாயிகளிடம் பதில் அளித்து பேசிய நயினார் நாகேந்திரன், இப்பகுதியில் மக்களை சந்திக்கும் போது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியாக காணப்படுகிறது, வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி ஆட்சி அமைத்தால் நிச்சயம் நாமக்கல் அருகே விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கும் திட்டம் கொண்டுவரப்படாது. திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதை கொடுக்காமல் இந்த அரசு ஏமாற்றி விட்டது., நாமக்கல் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வருடந்தோறும் தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.தமிழகத்தில், டாஸ்மாக் மூட வேண்டும், கள்ளை கொண்டு வர வேண்டும் என்பதில் பாஜகவுக்கும் ஒத்த கருத்து உள்ளது, பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி, அடுத்த மாதம் 18-ம் தேதி கோவை வர உள்ளார் என்ற செய்தி வந்துள்ளது. அப்போது நாமக்கல் மாவட்ட விவசாயிகளும் தங்களுடைய பூட்டப்பட்ட வேளாண் பொருள்களை காட்சிக்கு வைக்க வேண்டும். மோகனூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் மோகனூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்,மத்திய அரசுடன், மாநில அரசு இணக்கமாக் இருந்தால்தான் மத்திய அரசுடமிருந்து அதிகளவு நிதியை பெற முடியும், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் தோல் தொழிற்சாலையும், சிறைச்சாலையும் வராமல் தடுக்கப்படும்,தமிழகத்தில் போதை பொருள் விற்பனை அதிகளவு குற்றங்கள் நடப்பதற்கு காரணம் என்றும் இதற்கு உதாரணம், கோவை சம்பவமே சாட்சி ஆகும். விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்தும் பாஜக உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அங்கு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் தமிழகத்தில் 12-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று 2-வது நாள் நாமக்கல்லில் நடைபெற்றுள்ளது. இந்த கிராமத்தில் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அடிப்படையில், வளையப்பட்டி பகுதியில் சிப்காட் இப்பகுதியில் அமைக்கப்படாது. ஏற்கனவே பெருந்துறை பகுதியில் சிப்காட் அமைந்ததால் ஈரோடு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிபுணர் குழுவே சிப்காட் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.நாமக்கல் பகுதியை சேர்ந்த அமைச்சர் மதி வேந்தனுக்கு சொந்தமான நிலம், சிப்காட் அமைய உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதியில் இருப்பதால், அந்த நிலத்தின் விலையை அதிகரிக்க, அப்பகுதி அருகே சிப்காட் அமைய முயற்சி செய்து வருகிறார்கள். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என பாஜக சார்பில் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். நாமக்கல் கால்நடை கல்லூரி பகுதியில் தொல் தொழிற்சாலை மற்றும் சிறைச்சாலை அமைக்க கூடாது. நாமக்கல் உட்பட தமிழ்நாட்டில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு சிப்காட் தோல் தொழிற்சாலை சிறைச்சாலை அமைக்க கூடாது. திமுக அரசு, கடந்த 4 ஆண்டுகளில் தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்குடன் உள்ளதால் தமிழக மக்களின் நிலைமை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தெரியாமல் ஓட்டு போட்டு விட்டதால் அதற்காகத்தான் இன்று மிகவும் வருத்தப்பட்டு, இந்த கிராமத்தில் ஒலிக்கின்ற குரல், திமுக அரசுக்கு மீதான எதிரொலி 2026 தேர்தலில் தமிழக முழுவதும் எதிரொலிக்கும். திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன், அதிமுக, பாஜகவின் கைப்பாவையாக உள்ளதே என்ற கேள்விக்கு, அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றும் ஊனங்கள்பட்டி கிராமத்தில் செய்தியாளரிடம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர்கள் டாக்டர் கே.பி. இராமலிங்கம் வி.பி. துரைசாமி, கட்சியின் மாவட்ட தலைவர்கள், விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Next Story




