ஆற்காடு எஸ்.எஸ்.எஸ் மெட்ரிக் பள்ளியில் அலோரா 2026" கலைத் திருவிழா:

X
Ranipet King 24x7 |7 Feb 2026 5:18 PM ISTஇராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு எஸ்.எஸ். எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அலோரா 2026" என்ற பெயரில் மாணவர்களின் கலைத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு எஸ். எஸ்.எஸ்.கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. ஏ. கே. நடராஜன் தலைமை தாங்கினார்.
ஆற்காடு எஸ்.எஸ்.எஸ் மெட்ரிக் பள்ளியில் அலோரா 2026" கலைத் திருவிழா: மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு! ஆற்காடு, பிப். 08: இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு எஸ்.எஸ். எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அலோரா 2026" என்ற பெயரில் மாணவர்களின் கலைத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு எஸ். எஸ்.எஸ்.கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. ஏ. கே. நடராஜன் தலைமை தாங்கினார் அவர் தனது உரையில், "கல்வியுடன் சேர்ந்து கலைகளும் மாணவர்களின் ஆளுமைத் திறனை வளர்க்கும்" என்று குறிப்பிட்டார். கல்லூரியின் செயலர் AN.சங்கர் விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற உளவியல் வாழ்க்கைத்திறன் பயிற்சியாளர் மற்றும் ஒன் லைப் அகாடமி -ன் தலைமை நிர்வாக அதிகாரி, டாக்டர் கே.கார்த்திக் வேலு, மாணவர்களிடையே தன்னம்பிக்கை குறித்தும், நவீன உலகில் வாழ்க்கைத்திறன்களின் அவசியம் குறித்தும் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில், மாணவ - மாணவிகளின் நடனம், நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வெகுவாகக் கவர்ந்தன. விழாவின் இறுதியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
