நாமக்கலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்–2026 : அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு கூட்டம் ஏ.ஆர். ராகுல்நாத், பங்கேற்ப்பு.
மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் ஏ.ஆர். ராகுல்நாத், தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடர்பாக படிவம் 6 (பெயர் சேர்ப்பு), படிவம் 7 (பெயர் நீக்கம்), படிவம் 8 (திருத்தம்/மாற்றம்) ஆகிய விண்ணப்பங்கள் எவ்வாறு பரிசீலிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணிநிலை, மாற்றுத்திறனாளிகள் குறியீடு பதிவு, அதிகபட்ச பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் பற்றிய தகவல்கள் பரிசீலிக்கப்பட்டன.வாக்காளர் பட்டியலில் உள்ள புகைப்படங்களின் தரம், வாக்காளர் அடையாள அட்டை விநியோகம், இளம் வாக்காளர்களின் பெயர் சேர்ப்பு முன்னேற்றம் மற்றும் பொதுமக்களுக்கான குறைதீர்க்கும் உதவி மைய செயல்பாடு ஆகியவை குறித்தும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மா.க. சரவணன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட் நில எடுப்பு) திரு. ம. கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோ. குமரன் உள்ளிட்ட அனைத்து தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை துல்லியமாகவும் விரைவாகவும் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என ஏ.ஆர். ராகுல்நாத் அறிவுறுத்தினார்.



