செஞ்சேரிமலையில் 206-வது ஆண்டு அம்பு சேவை விழா கோலாகலம்!
கோவை மாவட்டம் சூலூர் வட்டம் செஞ்சேரிமலையில், புகழ்பெற்ற 206-வது ஆண்டு அம்பு சேவை விழா கோலாகலமாக நடைபெற்றது. பூவுலகவுக்கவுண்டர் குல பூவுலகவுக்கவுண்டர்கள் மற்றும் நல் நிருவாக அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இவ்விழா அதிகாலை மங்கள இசையுடன் தொடங்கி, மந்திர வேலாயுதசுவாமி திருக்கோயிலில் விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான அம்பு சேவை ஊர்வலத்தில் பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்களும், சமூகத் தலைவர்களும் கலந்துகொண்ட இவ்விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இவ்விழா பக்திப் பெருக்கோடு இனிதே நிறைவுற்றது.
Next Story



