இந்து அமைப்பினார்கள் 21 பேர் கைது

இந்து அமைப்பினார்கள் 21 பேர் கைது
X
வேடசந்தூர், எரியோடு, வடமதுரை, கூம்பூர் பகுதியில் இந்து அமைப்பினார்கள் 21 பேர் கைது
வேடசந்தூர் பகுதி இந்து இயக்க நிர்வாகிகளை அதிகாலை முதலே தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். பல முக்கிய நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்ட நிலையில் இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சி, இந்து மக்கள் கட்சி, இந்து மகா சபா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 11 நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் வடமதுரை ரோட்டில் உள்ள சினேகா திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் கூம்பூரில் இரண்டு பேரும், எரியோட்டில் ஒருவரும் வட மதுரையில் 7 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்து அமைப்பு நிர்வாகிகள் எங்கெங்கு ஒளிந்துள்ளார்கள் என்று தீவிர தேடுதல் வேட்டையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால் கைது எண்ணிக்கை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் அரசின் உத்தரவு வரும் வரை விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
Next Story