சாம்சங் தொழிலாளர்கள் 22வது நாளாக தங்களது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
சாம்சங் தொழிலாளர்கள் 22வது நாளாக தங்களது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
சாம்சங் தொழிலாளர்கள் 22வது நாளாக தங்களது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிற்சாலை நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவதை தொழிலாளர்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள சாம்சங் தொழிற்சாலை நிறுவனம் வீட்டு உபயோகப் பொருட்களை தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வருகிறது. இங்கு 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வரும் நிலையில் ஊதிய உயர்வு எட்டு மணி நேர பணி மற்றும் சிஐடியு தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் தொடர்ச்சியாக போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தை சுமுக பேச்சுவார்த்தை ஐந்து முறை நடைபெற்ற நிலையில் நிர்வாகம் தொழிற்சாலை அங்கீகாரத்தை ஏற்க மறுப்பதால் தோல்வி அடைந்து வருகிறது.இந்த நிலையில் இன்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தொழிற்சாலை நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களை பணிய அமர்த்தி வரும் செயலை தொழிற்சாலை ஊழியர்கள் சங்கம் கண்டிக்கிறது. மேலும் வரும் நாட்களில் சிஐடியு பிற தொழிற்சாலை சங்கங்கள் தங்களது தொழிற்சாலை முன்பு வாயிற் கூட்டம், காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் குடும்பத்துடன் பங்கேற்பு என பல தொடர் நிகழ்வுகளை நடத்த உள்ளது என தெரிவித்துள்ளது.