அரக்கோணத்தில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணத்தில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்
X
அரக்கோணத்தில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்
ராணிபேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில், மதுவிலக்கு பிரிவு துணை எஸ் பி ராமச்சந்திரன் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரக்கோணம் சில்வர்பேட்டை சோதனைச்சாவடி அருகே, இச்சிபுத்தூர் ரெயில் நிலையம் பகுதி, பாணாவரம் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த பைகளை போலீசார் சோதனை செய்ததில் சுமார் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவுசெய்து, கஞ்சாவை கடத்தி வந்து பதுக்கி வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story