இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 23 மூத்த தம்பதியினருக்கு திருமணம் : அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்பு..

X
Rasipuram King 24x7 |10 Feb 2026 9:44 PM ISTஇந்து சமய அறநிலையத்துறை சார்பில் 23 மூத்த தம்பதியினருக்கு திருமணம் : அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்பு..
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 23 மூத்த தம்பதியினருக்கு சஷ்டியப்த பூர்த்தி விழா நடத்தி, சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக திருக்கோவில்கள் சார்பில் மூத்த தம்பதியினர் சிறப்பு செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதனையடுத்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதியினர் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டார்கள். இதில் மூத்த தம்பதியினருக்கு அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மாலை எடுத்துக் கொடுக்க தம்பதியினர் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் அனைவருக்கும் பங்கேற்றவர்களுக்கு ஆசி வழங்கினர். கோவில் நிர்வாகம் சார்பில் தம்பதியினருக்கு வேட்டி, சேலை, தாம்பூலம் போன்றவை வழங்கப்பட்டது. கோவில் அர்ச்சகர்கள் உபாமதி சிவம், ஸ்ரீமது தில்லை நாத சிவம் ஆகியோர் நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். இதில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர், ஆர்.எஸ்.ரங்கசாமி, நகர திமுக செயலரும், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான என்.ஆர்.சங்கர், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் பி.சக்திவேல்,ஸ்ரீகைலாசநாதர் ஆலய நிர்வாக அலுவலர் தெ.சவீதா, நித்ய சமங்கலி மாரியம்மன் கோவில் நிர்வாக அலுவலர் பா.நந்தகுமார், இந்து சமய அறநிலையத்துறை ராசிபுரம் சரக ஆய்வாளர்சு.கீதா மணி உள்ளிட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
Next Story
