பஞ்சாபில் நடைபெற்ற தேசிய 24 சப் ஜூனியர் வூசு சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று திருப்பத்தூருக்கு பெருமை சேர்த்த பள்ளி மாணவன்
திருப்பத்தூர் மாவட்டம் பஞ்சாபில் நடைபெற்ற தேசிய 24 சப் ஜூனியர் வூசு சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று திருப்பத்தூருக்கு பெருமை சேர்த்த பள்ளி மாணவன் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ரெட்டமலை சீனிவாசன் பேட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் நித்திஷ் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு ஊசூ சங்கத்தில் பயிற்சிளர் வெங்கடேசனிடம் கடந்த 4 வருடங்களாக பயிற்சி பெற்ற வருகிறார். இந்த நிலையில் 24வது தேசிய சப் ஜூனியர் வூசு சாம்பியன்ஷிப் போட்டிகள் பஞ்சாப் மாநிலம் தர்ன் தரண் மாவட்டத்தில் உள்ள போலீஸ் லயன் ஸ்டேடியத்தில் கடந்த 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களிலும் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் தமிழக அணியில் விளையாடிய திருப்பதுார் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் நித்திஷ், தாலூ என்ற கத்தி சுத்தும் பிரிவில் கலந்துகொண்டு ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தை வென்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார். மேலும் இவர் போட்டியை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் போது ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் நித்திஷ்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் தற்போது வெள்ளிப் பதக்கம் மட்டுமே பெற முடிந்தது அடுத்த முறை கடின உழைப்பால் தங்கம் வெல்வேன் எனவும் கூறினார். மேலும் பதக்கம் வென்ற மாணவன் நித்திஷ்க்கு மாவட்ட விளையாட்டு வூசு சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்… பேட்டி: நித்ஷ் மாணவன் பேட்டி வெங்கடேசன் மாஸ்டர்
Next Story



