பிளைவுட் ஏற்றிச் சென்ற 25 டன் எடை கொண்ட லாரி முழுவதும் எரிந்து நாசம்.
NAMAKKAL KING 24X7 B |30 Oct 2025 8:39 PM ISTநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் கேரளாவில் இருந்து ஹைதராபாத்திற்கு பிளைவுட் ஏற்றிச் சென்ற 25 டன் எடை கொண்ட லாரி ஒன்று டீசல் நிரப்புவதற்காக அப்பகுதியில் நிறுத்தி இருந்தனர்.
லாரியை திருச்செங்கோடு வால்ராசம் பகுதியை சார்ந்த நாகராஜ் என்பவர் வண்டியை ஓட்டி வந்தார். ஓட்டுனர் வண்டியை நிறுத்திவிட்டு எதிரே உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று வண்டியை முன் பகுதியில் உள்ள பம்பில் டீசல் நிரப்பப்படுமா என கேட்கையில் திடீரென லாரியின் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ பற்றியது டயரில் பிடித்த தீயானது டீசல் டேங்கிலும் பரவியதால் லாரி முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தீயணைப்புத் துறைகளுக்கு தகவல் தந்தனர்.தகவலைத் தொடர்ந்து திருச்செங்கோடு பகுதியில் இருந்து இரண்டு தீயணைப்பு வண்டிகளும் மற்றும் வெப்படை பகுதியில் இருந்து ஒரு தீயணைப்பு வண்டி அங்கு வந்து கொழுந்துவிட்டு எறிந்த லாரியை ஒரு மணி நேரமாக போராடி தீயணைப்பு வீரர்கள் அனைத்தனர்.இந்த தீ விபத்தில் லாரிக்கு அருகே இருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் முற்றிலும் கருகி சேதமானது மேலும் அருகே உள்ள கடைகளில் தீ பரவும் என்ற பயத்தில் கடை உரிமையாளர்கள் கடையின் பூட்டிவிட்டு தப்பினர் இருந்தும் கடையின் முன் பகுதி ஷட்டர் முழுவதும் எரிந்து பெயிண்ட் உருகிய நிலையில் இருந்தது நல்வாய்ப்புக்காக உயிர் சேதம் ஏற்படவில்லை.இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் நகர போலீசார் சபாவிடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story



