ராசிபுரம் அருகே 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக முடிவு பெற்ற திட்டப்பணிகளை எம்.பி ராஜேஷ்குமார் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்...

X
Rasipuram King 24x7 |26 Jan 2026 7:46 PM ISTராசிபுரம் அருகே 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக முடிவு பெற்ற திட்டப்பணிகளை எம்.பி ராஜேஷ்குமார் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் பேரூராட்சி பகுதியில் பாராளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியானது நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்குமார் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். விழாவின்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அங்கன்வாடி மையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், மற்றும் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டுமென MP. ராஜேஷ் குமாரிடம் கோரிக்கையை வைத்தனர். உடனடியாக MP.ராஜேஷ்குமார் அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் அழைத்து அங்கன்வாடி மையத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கூறி, குடிநீர் பற்றாக்குறை குறித்து கேட்ட இளைஞர்களை அப்பகுதியில் நடைபெற்று வரும் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை இளைஞர்களிடம் காட்டி கூடிய விரைவில் பணி முடிவுற்று குடிநீர் வழங்கப்படும் என கூறினார். குறைகளை கூறிய இளைஞர்களை அழைத்து MP ராஜேஷ்குமார், புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைக்குமாறு கூறியும் பின்னர் குத்துவிளக்கு ஏற்று வைத்தது குறிப்பிடத்தக்கது...
Next Story
