மாட்டு சந்தையில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது ரூபாய் 250 பறிமுதல்.

மாட்டு சந்தையில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது ரூபாய் 250 பறிமுதல்.
மாட்டு சந்தையில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது ரூபாய் 250 பறிமுதல். கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியில் பணம் வைத்த சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் சசிகலாவுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நவம்பர் 28ஆம் தேதி மாலை 4 மணியளவில் உப்பிடமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள மாட்டு சந்தை பகுதியில் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட உப்பிடமங்கலம் வடக்குகேட் பகுதியைச் சேர்ந்த ராஜலிங்கம், ஆசைத்தம்பி, முருகேசன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 250யும் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியனை காவல்துறையினர்.
Next Story