சென்னையில் நடைபெறும் பாமக இளைஞர் சங்க கூட்டத்திற்கு 250 க்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்க உள்ளனர்- மாநில இளைஞர் சங்க செயலாளர் வடிவேலன் கரூரில் பேட்டி.

சென்னையில் நடைபெறும் பாமக இளைஞர் சங்க கூட்டத்திற்கு 250 க்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்க உள்ளனர்- மாநில இளைஞர் சங்க செயலாளர் வடிவேலன் கரூரில் பேட்டி.
சென்னையில் நடைபெறும் பாமக இளைஞர் சங்க கூட்டத்திற்கு 250 க்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்க உள்ளனர்- மாநில இளைஞர் சங்க செயலாளர் வடிவேலன் கரூரில் பேட்டி. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ண புரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில துணை தலைவர் மருத்துவர் மணி, மாநில இளைஞர் சங்க செயலாளர் வடிவேலன், கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன், உள்ளிட்ட மாநில மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த மாநில இளைஞர் சங்க செயலாளர் வடிவேலன், வருகிற 10-ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் மாநில இளைஞர் சங்க கூட்டத்திற்கு கரூர் மேற்குமாவட்டம் சார்பாக 250 இளைஞர்கள் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணி 180 இடங்களுக்கு மேலாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் எனவும், கரூர் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதியும் அதிமுக கூட்டணி வெல்லும் எனவும், இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தீவிரமாக தேர்தல் பணியாற்றுவது என முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story