ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 26 பயனாளிகளுக்கு 15.04 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 9 பெண் ஓட்டுநர்களுக்கு ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆட்டோ மானியம், ஒரு பயனாளிக்கு ரூ.20,000 மதிப்பில் ஸ்கூட்டர் மானியம், ஒரு பயனாளிக்கு ரூ.5.00 இலட்சம் மதிப்பில் பணியிடத்து விபத்து மரண நிவாரண உதவி, 15 பயனாளிகளுக்கு ரூ.84,000 மதிப்பில் ஐ.டி.ஐ. பயிற்சி சான்றிதழ் என 26 பயனாளிகளுக்கு 15.04 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முன்னதாக, மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 305 மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், தொழிலாளர் உதவி ஆணையார் (ச.பா.தி) கே.பி.இந்தியா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
