குருசாமிபாளையம் உதய நிலா மக்கள் நல சங்கம்‌ சார்பில் 27 ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டி ஏராளமான குழந்தைகள் பங்கேற்பு..

குருசாமிபாளையம் உதய நிலா மக்கள் நல சங்கம்‌ சார்பில் 27 ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டி ஏராளமான குழந்தைகள் பங்கேற்பு..
X
குருசாமிபாளையம் உதய நிலா மக்கள் நல சங்கம்‌ சார்பில் 27 ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டி ஏராளமான குழந்தைகள் பங்கேற்பு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் பெரிய வீதி பகுதியில் குருசாமிபாளையம் உதய நிலா மக்கள் நல சங்கம்‌ சார்பில் 27 ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியை உதய நிலா மக்கள் நலச் சங்கத்தின் தலைவர் சிவ ஸ்ரீ எம். பழனிச்சாமி சிவாச்சாரியார் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் குழந்தைகள் எண் கல் அடுக்குதல், கூடை பந்து எடுத்தல், பந்து அடுக்குதல், அனைவருக்கும் உள்ளே-வெளியே அதிர்ஷ்ட கட்டம், சிறுவர்கள் ஸ்பூனில் பந்து எடுத்தல் | பலூன் மீது கப் அடுக்குதல் பந்து - பால் சேகரித்தல், கலர் மாற்றி அடுக்குதல், வட்டம் - பால் சேகரித்தல், திருக்குறள் ஒப்புவித்தல், சிறுமிகள் பிலிப் கப் பால் பிடித்தல், பால் மேல் கப் வைத்தல் ,பந்து உதைத்தல்,(பாட்டில்) டம்ளர் சேகரித்தல்,(நடு) பாட்டலில் நீர் நிரப்புதல், திருக்குறள் ஒப்புவித்தல், பெண்கள் பாட்டலில் நீர் நிரப்புதல் ,பந்து - பால் சேகரித்தல், இசை பந்து -வாட்டர் பாட்டில், ஆண்கள்பாட்டலில் நீர் நிரப்புதல் இசை பந்து வாட்டர் பாட்டில் இன்னும் பல மகிழ்வூட்டும் போட்டிகள் நடத்தப்பட்டு மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடி உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் உதய நிலா மக்கள் நல சங்கம் தலைவர் சிவஸ்ரீ M.பழனிசாமி சிவாச்சாரியார், செயலாளர்R.கதிரேசன், பொருளாளர் R.சீனிவாசன், செயற்குழு மற்றும் மன்ற உறுப்பினர்கள் , விழா கமிட்டி நிர்வாகிகள் மற்றும் சிறுவர், சிறுமியர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
Next Story