காணியாளம்பட்டியில் ரூபாய் 28 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டிய வேளாண் கிட்டங்கியை எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்தார்.

காணியாளம்பட்டியில் ரூபாய் 28 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டிய வேளாண் கிட்டங்கியை எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்தார்.
காணியாளம்பட்டியில் ரூபாய் 28 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டிய வேளாண் கிட்டங்கியை எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்தார். கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா மஞ்ச நாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள காணியாளப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக வளாகத்தில் புதிதாக ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேளாண் கிட்டங்கியை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து கிட்டங்கியில் குத்து விளக்கு ஏற்றி வைத்து கிட்டங்கியை கூட்டுறவு சங்க பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், மஞ்ச நாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் மாதவன், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கிட்டங்கி திறப்பு விழாவை சிறப்பித்தனர்.
Next Story