ஏலகிரி மலையில் வருகின்ற 29 தேதி கோடைவிழா நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஏலகிரி மலையில் வருகின்ற 29 தேதி கோடைவிழா நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
X
ஏலகிரி மலையில் வருகின்ற 29 தேதி கோடைவிழா நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் வருகின்ற 29 தேதி கோடைவிழா நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலையில், 2025-ஆம் ஆண்டிற்கான கோடை விழா, வருகின்ற 29.06.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தர்வல்லி அறிவிப்பு கோடை விழாவில், மலர் கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள், மகளிர் சுய உதவி குழுக்களின் அரங்கம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களை களிப்புடன் கண்டுகளிக்க பொது மக்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் அனைவரும் கலந்துகொள்ள ஏதுவாக, ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு சிறப்பு பேருந்தும், திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் காலை முதல் இரவு வரை சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயக்கப்படும் அனைத்து சிறப்பு பேருந்துகளும் பொன்னேரி பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏலகிரிக்கு ஏற்றி, இறக்கி செல்லும். அனைவரும் வருகை புரிந்து, கோடை விழாவினை சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி அறிவிப்பு
Next Story