கரூரில் 29.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு.மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கரூரில் 29.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு.மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூரில் 29.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு.மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. கடந்த இரு மாதங்களாகவே கரூர் மாவட்டத்தில் மழை இல்லாமல் வானிலை வறட்சியாக காணப்பட்டது. பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை கரூரில் சுமார் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கரூரில் 29.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானதாகவும் , இதனுடைய சராசரி அளவு 2.48 மில்லி மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story