மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்!

X
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரியில் இருந்து மணல் கடத்துவதாக குடியாத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஜே.சி.பி இயந்திரம் மூலம் மண் எடுத்து லாரியில் கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

