ஆற்றும் கரங்கள் எனும் சிறப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா

அறக்கட்டளை தலைவர் நா.ஜெயராமன் ஐயாவின் 73 ஆண்டின் அகவை தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
பெரம்பலூர் வட்டம் , எளம்பலூர் சமத்துவபுரம் - வடக்குமாதவி சாலையில் படுத்தபடுக்கையில் இருப்பவர்களுக்கான ஆற்றும் கரங்கள் எனும் சிறப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் மற்றும் ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை தலைவர் நா. ஜெயராமன் தலைமையில் , மணிமேகலை ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றது . இல்லத்தில் பணிபுரியும் செவிலியர்கள் உட்பட அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து பாராட்டி இல்லம் மென்மேலும் சிறப்பு பெற வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் அறக்கட்டளை தலைவர் நா.ஜெயராமன் ஐயாவின் 73 ஆண்டின் அகவை தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை செயலாளர் செவிலியர் உமாமகேஸ்வரி, நிறுவனர் அருண் ஆப்ரஹாம், செவிலியர்கள் அனிதா, அபிராமி, சாருபாலா, நிர்மலா பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் குழு குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ், தொடர் குருதி கொடையாளர்கள் மகேஸ்குமரன், சபரி துரைராஜ், செங்குணம் குமார் அய்யாவு மற்றும் விக்கி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story