கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது

கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
X
திண்டுக்கல் அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது, 800 கிராம் கஞ்சா, 1 டூவீலர் பறிமுதல்
திண்டுக்கல் புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாலுகா காவல் நிலைய சார்புஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது NGO-காலனி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த விக்னேஷ்(28), கணபதி(26) மற்றும் ஒரு விக்னேஷ்(25) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 800 கிராம் கஞ்சா, 1 டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story