தக்கலை பகுதியில்  3 கடைகளில் திருடியவர் கைது

தக்கலை பகுதியில்  3 கடைகளில் திருடியவர் கைது
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கொல்லன் விளை  பகுதியை சேர்ந்தவர் சரவணபவன். இவர் பொட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலையில் கடை திறக்க வந்த போது பூட்டை உடைத்து உள்ளே இருந்த 100 பாக்கெட் சிகரெட், 3 பண்டல் பீடி ஆகியவை மாயமாக இருந்தது. இரவில் பூட்டை உடைத்து திருடி சென்றது  தெரிய வந்தது.       இதுபோன்று அழகிய மண்டபம் பகுதி சேர்ந்த வசந்தா என்பவரின் எலக்ட்ரானிக் கடையை உடைத்து  ரூபாய் 15, ஆயிரம், இரண்டு ஆம்ப்ளிபையரும் திருடப்பட்டது.       தக்கலை பஸ் நிலையத்தில் உள்ள முருகன் என்பவரின் கடையில் ரூபாய் 10 ஆயிரத்து 300, ரூ.3  ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட் திருடப்பட்டு இருந்தது.       இந்த மூன்று சம்பவங்கள் குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து செய்து விசாரித்தனர். அப்போது இந்த மூன்று திருட்டு சம்பவத்திலும் ஒரே நபர் ஈடுபட்டது தெரிய வந்தது.        இதையடுத்து நேற்று இரவு 7 மணி அளவில் அழகிய மண்டபம் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கேரள மாநிலம் நெடுமாங்காட்டை சேர்ந்த விஜயன் (58) என்பது தெரிய வந்தது.       தொடர் விசாரணையில் அவர் மூன்று கடைகளில் திருடியதை ஒப்புக்கொண்டார். போலீசார் விஜயனை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
Next Story