வாலிபரை கட்டையால் தாக்கி கொல்ல முயற்சி : 3பேர் கைது

வாலிபரை கட்டையால் தாக்கி கொல்ல முயற்சி : 3பேர் கைது
X
தூத்துக்குடியில் வாலிபரை கட்டையால் தாக்கி கொல்ல முயற்சி : 3பேர் கைது
தூத்துக்குடியில் வாலிபரை கட்டையால் தாக்கி கொல்ல முயன்ற 3பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் ஆறுமுகசாமி (19). இவர், தூத்துக்குடி துறைமுகத்தில் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 14ம் தேதி முத்தையாபுரம் திருமாஜி நகரில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் நடனமாடினாராம். இதையடுத்து அய்யன்கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் பாலமுருகன் என்பவர, எங்கள் ஏரியாவில் வந்து எப்படி ஆடலாம் என்று கூறி அவரிடம் தகராறு செய்தாராம். மேலும், அவரை பாலமுருகன் உட்பட 5பேர் சேர்ந்து கட்டையால் தாக்கினார்களாம். இதில் காயம் அடைந்த ஆறுமுகசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, பாலமுருகன், அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்த யோவான் மகன் பாக்கியராஜ் (31), பிச்சை மகன் பிரபாகரன் (35) ஆகிய 3 பேரை கைது செய்தார். மேலும் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள 3பேர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர.
Next Story