ஊத்தங்கரை அருகே உள்ள காப்பர் ஓயர் திருடிய 3 பேர் கைது.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி அடுத்த ஆனந்தூரை சேர்ந்தவர் சிங்காரம் (63). விவசாயி. தனது நிலத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த காப்பர் ஒயர் 250 மீட்டர் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் கல்லாவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் காப்பர் ஒயரை திருடியது பேரண்டப்பள்ளி சிப்காட் பழைய பவர் பிளாண்டை சேர்ந்த முருகேசன் (40) பழனிசாமி (43) கல்லாவியை பகுதியை சேர்ந்த பெருமாள் (42) என தெரிய வந்தது. இதை அடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story

