கள்ளிமந்தயம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மிரட்டி, வாயை பொத்தி 3 பவுன் செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது_

கள்ளிமந்தயம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மிரட்டி, வாயை பொத்தி 3 பவுன் செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது_
X
Dindigul
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அடுத்த கள்ளிமந்தயம் பொருளூர், பில்லாகாட்டுவலசு பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள்(75) இவர் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து மிரட்டி செல்லம்மாளின் வாயை பொத்தி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றது தொடர்பாக கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம், DSP. கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கள்ளிமந்தயம் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி தலைமையில் சார்பு ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன் காவலர்கள் கார்த்திக்ராஜன், மோரிஸ்ஜோசப்ராஜ், காங்குமணி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பில்லாகாட்டு வலசு பகுதியை சேர்ந்த தவமணி மகன் சங்கர்(32) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
Next Story