தாடிக்கொம்புவில் தவெக நிர்வாகிகள் 3 பேர் கைது
Dindigul King 24x7 |10 Jan 2026 5:10 PM ISTDindigul
திண்டுக்கல் தாடிக்கொம்பு, அகரம் கிராமம், பெரியமல்லணம்பட்டியை சேர்ந்த முருகன்(19) இவரது வீட்டின் மேல் வேண்டாம் என்று கூறியும் த.வெ.க கட்சியின் கொடியை அதே ஊரை சேர்ந்த பெத்துராஜ், பாண்டீஸ்வரி கட்ட சொன்னார் என்று கட்டினார். கடந்த 3 நாட்களுக்கு தந்தை கூறியதாக தவெக கொடியை முருகன் கழட்டிவிட்டார். இதுகுறித்து பாண்டீஸ்வரி முருகனிடம், செல்போனில் அசிங்கமாகவும், ஆபாசமாகவும், செருப்பால் அடிப்பேன் என்றும் ஜாதியை குறித்தும் பேசியதாக முருகன் அளித்த புகாரின் பேரில் புறநகர் டிஎஸ்பி. சங்கர் மேற்பார்வையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக பாண்டீஸ்வரி, பெத்துராஜ், பாண்டீஸ்வரி மகன் காளிராஜா ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story


