திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியில் 3வது படிக்கும் மாணவி ரக்க்ஷிதா மர்மமான முறையில் இறந்ததை அடுத்து உறவினர்கள் சாலை மறியல் இழப்பீடு அரசு வேலை கேட்டு போராட்டம்
Tiruchengode King 24x7 |10 Feb 2026 5:19 PM ISTதிருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியில் 3வது படிக்கும் மாணவி ரக்க்ஷிதா மர்மமான முறையில் இறந்ததை அடுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு இழப்பீடு அரச வேலை வழங்க கோரிக்கை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த குமாரமங்கலம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவி ரக்க்ஷிதா பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்காக ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை பார்க்க பள்ளிக்கு வந்தவர் திடீரென மயங்கி விழுந்தார் உடனே திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி மாணவி இறந்ததை அடுத்து தொடர்பாக நாமக்கல்லில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மாணவியின் சாவில் மர்மம் உள்ளது எனக் கூறி பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை மாதேஸ்வரன் தாய் தனலட்சுமி உள்ளிட்ட உறவினர்கள் குடும்பத்திற்கு இழப்பீடாக 20 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்செங்கோடு நாமக்கல் சாலையில் உள்ள குமரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின் தலைமையிலான வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் முறையாக முதல்வருக்கு கடிதம் வைக்கப்பட்டுள்ளது உங்களது கோரிக்கையும் கொடுங்கள் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்எதனை எடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது
Next Story


