ராசிபுரம் அருகே தனியார் பேருந்து லாரி மோதி விபத்து 3 பேர் உயிரிழப்பு-18 பேர் படுகாயம்...
Rasipuram King 24x7 |23 Nov 2024 1:05 PM GMT
ராசிபுரம் அருகே தனியார் பேருந்து லாரி மோதி விபத்து 3 பேர் உயிரிழப்பு-18 பேர் படுகாயம்...
ஆத்தூரில் இருந்து ராசிபுரத்தை நோக்கி தனியார் பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ராசிபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் பேருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கோரையாறு வளைவுப்பகுதியில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. பேருந்தை தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த ரவி (55) என்பவர் ஓட்டுச் சென்ற நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த பேருந்து ஓட்டுனர் ரவி(55), ஆத்தூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வகுமார் (55),புதுப்பட்டி பகுதியை சேர்ந்த பயணி அலமேலு(57) உள்ளிட்ட 3பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பின்னர் பொதுமக்கள் பேருந்தில் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்போது அரசு மருத்துவமனையில் 18 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன்,நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா,நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை நேரில் சந்தித்து முதலுதவி சிகிச்சை முறைகளை பார்வையிட்டு மேல் சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகளை தூரிதப்படுத்தினர். மேலும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர்,மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு அதிகாரியிடம் விசாரணை செய்தனர்.அப்போது விசாரணையின் போது பேருந்தில் பயணம் மேற்கொண்ட நடத்துனரிடம் கேட்டபோது முன்பக்க டயர் வெடித்து விபத்து நடைபெற்றதாக தெரிவித்தர். அப்போது நாமக்கல் RTO கூறுகையில் முன்பக்க டயர் வெடிக்கவில்லை எனவும் அதிவேகமாகச் சென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடைபெற்றதாக தெரிவித்தனர்.பின்னர் தொடர்ந்து விபத்து குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறினர். அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பத்திரிக்கையாளர்களுடம் கூறுகையில் தற்போது விபத்து நடைபெற்றது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விபத்தில் 3பேர் உயிரிழந்ததாகவும், 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து விபத்து குறித்து கேட்டபோது அதிகாரிகள் தற்போது விபத்து தொடர்பாக விசாரணை செய்து அதன் பிறகு முழுமையான அறிக்கை வெளியிடுவதாக தெரிவித்தார்..
Next Story