ஒட்டன்சத்திரம் அருகே காட்டு முயலை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது, ரூ. 20,000 அபராதம் - வனத்துறையினர் நடவடிக்கை

X
Dindigul King 24x7 |4 Jan 2026 2:36 PM ISTDindigul
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனசரகம் ஓடைப்பட்டி பகுதியில் காட்டு முயல் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் வன பாதுகாப்பு படை மற்றும் ஒட்டன்சத்திரம் வனப்பணியாளர்கள் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது எல்லமேடு பகுதியில் கண்ணி வைத்து காட்டு முயலை வேட்டையாட முயன்ற சின்னகண்ணு மகன் மணிகண்டன்(33), சுப்பையா மகன் மணிகண்டன்(28), சிதம்பரம் மகன் சோலை(27) ஆகிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து கண்ணி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அவர்களுக்கு ரூ.20,000 அபராதம் விதித்தனர்
Next Story
