திருச்செங்கோடு நகராட்சியில் ஐந்தாம் கட்டமாக 3வது வார்டு 24 வது வார்டு 27வது வார்டுபகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் பூமி பூஜை செய்து துவக்கம்

திருச்செங்கோடு நகராட்சியில் ஐந்தாம் கட்டமாக மூணாவது வார்டு பகுதியில் நவீன கழிப்பிடம் வேல்முருகன் நகரில்கான்கிரீட் சாலை 24 வது வார்டு பகுதியில்தார் ரோடு27 வது வார்டு பகுதியில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
திருச்செங்கோடு நகராட்சியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுபகுதியில் ரூபாய் 24 லட்சத்து 900 மதிப்பீட்டில் நவீன கழிப்பிடம் மற்றும் வேல்முருகன் நகர் பகுதியில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணி திட்டத்தின் கீழ் மூன்று கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு சாலை அமைக்கும் பணிகள் சமூக கழிப்பிடங்கள் கட்டும் பணிகள் பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டு வருகிறது ஐந்தாம் கட்டமாக மூன்றாவது வார்டுபகுதியில் கட்டி முடிக்கப்பட்ட நவீன கழிப்பிடம் திறப்பு விழா நடைபெற்றது ஆண்கள் கழிப்பிடத்தை திருச்செங்கோடு முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் திறந்து வைத்தார் பெண்கள் கழிப்பிடத்தை திருச்சங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு திறந்து வைத்தார் தொடர்ந்து வேல்முருகன் நகரில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது இந்த நிகழ்ச்சிகளில் நகர்மன்ற உறுப்பினர் செல்வி ராஜவேல்முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் நகர துணைச் செயலாளர் ராஜவேல் ஆகியோர் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர் இந்த இரண்டு பணிகளும் 24 லட்சத்து 90ஆயிரம் மதிப்பீட்டில்நடக்க உள்ளது.இதனைத் தொடர்ந்து24 ஆவது வார்டு பகுதியில் நூறு மீட்டர் நீளமுள்ள தார் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு பணியினை துவக்கி வைத்தார் நகர்மன்ற உறுப்பினர் மகேஸ்வரி உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் இதனை தொடர்ந்து27 வது வார்டு பகுதியில் இரண்டு பகுதிகளில் 200 மீட்டர் நீளமுள்ள கான்கிரீட் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது நிகழ்ச்சியில் வார்டு நகர் மன்ற உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் பூமி பூஜை நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு அனைத்து இடங்களிலும் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார் முன்னாள் நகர் மன்ற தலைவர் மேற்கு நகர திமுக செயலாளர் நடேசன் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபுஆகியோர் கலந்து கொண்டனர்
Next Story