கோவை: சூலூர் அருகே 3 கார்கள் மோதல் – 6 பேர் படுகாயம்
கோவை மாவட்டம், சூலூர் அருகே குமரன்கோட்டம் ஆறுபடை முருகன் கோயில் பகுதியில் நேற்று மூன்று கார்கள் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். திருச்சி சாலையில் கார் திருப்ப முயன்ற சுப்ரமணி மீது வேகமாக வந்த மற்றொரு கார் மோதியதில், அது கட்டுப்பாட்டை இழந்து மூன்றாவது காருடன் மோதியது. காயமடைந்த கலாவதி, முகமது ஆசிப், தெய்வானை, ராகுல் உள்ளிட்டோர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். விபத்தால் கோவை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story





