கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் முன்னிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியில் இணைந்த 30 பெண்கள்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் முன்னிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியில் இணைந்த 30 பெண்கள்
X
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளருமான ஈஸ்வரனின் செயல்பாடுகளும் மக்கள் நலத்திட்டங்களும் பிடித்திருந்ததால் தங்களை மாற்றுக் கட்சியிலிருந்து30 பெண்கள் உள்பட 50 பேர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியில் இணைத்துக் கொண்டனர்
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளருமான ஈஸ்வரனின் செயல்பாடுகளும் மக்கள் நலத்திட்டங்களும் பிடித்திருந்ததால் தங்களை மாற்றுக் கட்சியிலிருந்து கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியில் இணைத்துக் கொண்ட 30க்கும் மேற்பட்ட பெண்கள் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்டம் எலச்சிபாளையம் மேற்கு ஒன்றியம் காந்தி ஆசிரமம் புதுப்பாளையம் பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியைச் சார்ந்த பொதுமக்கள் எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் தீரன் தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் மா.கொங்கு கோமகன் மற்றும் மகளிரணி நிர்வாகி சாந்தாமணி, எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய பொருளாளர் முருகேசன் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்களின் முன்னிலையில் தங்களை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர், ராயல் செந்தில்,தலைமை நிலைய செயலாளர் நந்தகுமார்,மாவட்ட இணை செயலாளர்கள் லாவண்யா ரவி, மயில் ஈஸ்வரன், மேற்கு நகர செயலாளர் சேன்யோ குமார், , தீரன் தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் சி பி செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரப்பன்,மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சுரேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story