திருச்செங்கோட்டில் உள்ள 30 நியாய விலை கடைகளை சேர்ந்த 26 ஆயிரத்து 507 குடும்ப அட்டை தாரர்களுக்கு ரொக்கப் பணம் ரூ 3000 மற்றும் பொங்கல் பரிசுவழங்கும் விழா

X
Tiruchengode King 24x7 |8 Jan 2026 5:20 PM ISTதிருச்செங்கோட்டில் 30 நியாய விலை கடைகளில் ரூ 8கோடியே 25 லட்சம் மதிப்பிலான பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சிதிருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு பொங்கல் திருவிழாவை ஒட்டி அரிசி அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ பச்சரிசி ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கம் ரூம் 3000 ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது அதன்படி இன்று முதல் தமிழ்நாடு எங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு விவசாய கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கம் TAPCMSகட்டுப்பாட்டில் உள்ள 30 நியாய விலை கடைகளில் உள்ள26 ஆயிரத்து 57 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ எட்டு கோடியே 25 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி முறைப் படி ராஜா கவுண்டம்பாளையம் நியாயவிலை கடை பகுதியில் துவக்கி வைக்கப்பட்டது நிகழ்ச்சிக்கு டி ஏ பி சி எம் எஸ் நிர்வாக இயக்குனர் யசோதா தேவி தலைமை வகித்தார். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டு ராஜா கவுண்டம் பாளையம் நியாய விலை கடையில் உள்ள பயனாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன்,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு,கிழக்கு நகர திமுக செயலாளர்நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், நகர இளைஞரணி செயலாளர்செங்கோட்டுவேல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் வடக்கு நகர செயலாளர் குமார் தெற்கு நகர செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் அசோக் குமார் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி உலகநாதன் மனோன்மணி சரவண முருகன்மற்றும் டி ஏ பி சி எம் எஸ் பொது மேலாளர் கணேசன் உதவி மேலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னாள் நகர் மன்றஉறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும்கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு வெற்றி பெற்ற 15 வது வார்டு பகுதியில் உள்ள குலாலர் தெருவில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்முன்னாள் நகர் மன்ற தலைவர் மேற்கு நகர திமுக செயலாளர் நடேசன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மற்றும் வார்டு கமிட்டி உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story
