கரூரில் தைப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக ரூ. 3,000 ரொக்கத் தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பினை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பயனாளிகளுக்கு வழங்கினார்.

கரூரில் தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக ரூ. 3,000 ரொக்கத் தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பினை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பயனாளிகளுக்கு வழங்கினார்.
கரூரில் தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக ரூ. 3,000 ரொக்கத் தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பினை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பயனாளிகளுக்கு வழங்கினார். தமிழ்நாடு முதலைமைச்சர் 2026-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழுக் கரும்பு மற்றும் ரொக்க தொகை ரூ.3,000/- அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலை வழங்கிட ஆணையிட்டிருந்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த சில தினங்களாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், சோமூர் கிராமத்தில் அமைந்துள்ள நியாய விலைக் கடையில் பயனாளிகளுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரொக்க தொகை ரூபாய் 3,000 அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி வழங்கினார். கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story