புத்தன் அணையிலிருந்து முக்கடலுக்கு மே 31 வரை தண்ணீர் திறப்பு

X

அரசு அறிவிப்பு
நாகர்கோவில் மாநகருக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முக்கூடல் அணை தற்போது நீர்மட்டம் மைனஸ் மட்டத்திற்கு சென்றுவிட்டது. இதனால் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் எழுந்தது. 25 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட முக்கடல் அணையில் தற்போது மைனஸ் மட்டத்தில் தண்ணீர் உள்ளதால் சில நாட்களுக்கு மட்டுமே தாக்கப்பிடிக்கின்ற நிலை உள்ளது. எனவே குடிநீர் பற்றாகுறைய போக்கும் வகையில் புத்தன் அணையிலிருந்து இந்த ஆண்டு தண்ணீர் எடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு விவசாயிகள், பாசன அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அணை நீரை விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் குடிநீருக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் புத்தன் அணையில் இருந்து முக்கூடல் அணைக்கு குடிநீருக்கு தண்ணீர் வினியோகம் மே 31ஆம் தேதி வரை செய்யப்படும் என்று தமிழக அரசின் உத்தரவு பேரில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Next Story