ராசிபுரம் அருகே கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட 350 கிலோ குட்கா மற்றும் கார் பறிமுதல். ஒருவர் கைது, மற்றொருவர் தப்பி ஓட்டம்..

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சித்தராஜ்(35), அஜய் சவுகான் (37) ஆகிய இருவர் கர்நாடகா பகுதியில் இருந்து சுமார் 350 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை எடுத்துக் கொண்டு ராமநாதபுரம் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. அப்போது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்தபோது கர்நாடகா என் கொண்ட வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.அப்போது வாகனத்தில் இருந்த 2 நபர் முன்னுக்கு முரணாக பதில் கூறவே காவலர்கள் வாகனத்தை சோதனையிட்ட போது வாகனத்தில் சுமார் மூன்றரை லட்சம் மதிப்பிலான 350 கிலோ குட்கா கடத்திவரப்பட்டது தெரியவந்தது.பின்னர் மங்களபுரம் காவல்துறையினர் கார் மற்றும் குட்காவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் கர்நாடகா மாநிலத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு குட்கா விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. விற்பனைக்காக கொண்டு வந்த கர்நாடகாவை சேர்ந்த சித்தராஜ் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய அஜய்சாவுகான காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்..
Next Story