கொங்கணாபுரம் வாரச்சந்தையில்3500 ஆடுகள் ரூ.4.5 கோடிக்கு விற்பனை
Edappadi King 24x7 |30 Nov 2024 2:29 PM GMT
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் டவுன்பஞ்சாயத்தில் செயல்படும் வாரச்சந்தையில் நேற்று 3500ஆடுகள் ரூபாய் 4.5கோடிக்கு விற்பனையானது.
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுக்கா கொங்கணாபுரம் டவுன்பஞ்சாயத்தில் சனிக்கிழமை வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் ஆடு மற்றும் கட்டுச்சேவல் அதிகளவில் விற்பனையாகிறது. சனிக்கிழமை வார சந்தைக்கு சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகளும், வியாபாரிகளும் ஆடுகளை கொண்டுவந்து விற்பனைசெய்தும் வாங்கியும் செல்கின்றனர் கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு இன்று சுமார் 5000 ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனர்.5000 ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தநிலையில் சுமார் 3500 ஆடுகள் விற்பனையானது. ஆடு ஒன்று சராசரியாக ரூபாய் 6000முதல் ரூபாய் 25000 வரை விற்பனையானது. மேலும் சுமார் 1200கட்டுசேவல்களும் விற்பனையானது. கொங்கணாபுரம் வாரச்சந்தையில் நேற்று சுமார் ரூ.4.5கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
Next Story