டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் அன்று ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் அவர் படித்த பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாட வேண்டும் ஆசிரியர்கள் கோரிக்கை

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் அன்று ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் அவர் படித்த பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாட வேண்டும் ஆசிரியர்கள் கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த பள்ளி

திருத்தணியில் பிறந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவரது 136 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினார்கள் அவர் படித்த பள்ளியில் அரசு ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி வந்தனர் சில ஆண்டுகளாக விருதுகளை வழங்கவில்லை என்று ஆசிரியர்கள் ஆதங்கத்துடன் குற்றச்சாட்டு மீண்டும் ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் அவர் படித்த பள்ளியில் விருதுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளனர்.


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வெங்கடாபுரம் என்ற கிராமத்தில் 1888 ஆம் ஆண்டு பிறந்தவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இவர் ஆரம்பக் கல்வியை திருத்தணி ரயில் நிலையம் எதிரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்துள்ளார்

அவர் படித்த பள்ளி அவர் பெயரில் தற்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாக செயல்படுகிறது

இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாகவும், பாரத ரத்னா விருது பெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது

இந்தியா முழுவதும் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் இந்த நிகழ்ச்சியில்

அவர் பிறந்த திருத்தணி அருகில் உள்ள வெங்கடாபுரம் கிராம மக்கள் ராதாகிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடுகின்றனர் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு அவருக்கு இந்த பகுதியில் அவர் பிறந்த ஊரில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளனர் மேலும்

ஆசிரியர்கள் சங்கங்கள், ரோட்டரி சங்கங்கள், திமுக,அ.தி.மு.க சார்பிலும் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளுக்கு அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து ஆசிரியர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்

அவர் ராதாகிருஷ்ணன் படித்த பள்ளியில் அவரது சிலைக்கு மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து அந்தப் பள்ளியில் ஆசிரியர்களாக உள்ளவர்களுக்கு மாணவர்கள் இனிப்புகள் மற்றும் பூக்களை வழங்கி ஆசிரியர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் அன்று ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் அவர் படித்த பள்ளியில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து நல்லாசிரியர் விருது மாவட்ட ஆட்சியர் போன்றவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று விருதுகளை வழங்கி பாராட்டி வந்தனர்

இந்த நிகழ்ச்சி சில ஆண்டுகளாக நிகழ்ச்சி நடத்தப்படாமல் உள்ளது

இந்த ஆசிரியர் தின நாளில் பெருமை சேர்க்கும் வகையில் அவர் படித்த பள்ளியில் ஆசிரியர் தினத்தில் நல்லாசிரியர் வழங்கி தமிழக அரசு மீண்டும் ஆசிரியர்களுக்கு ஊக்கப்படுத்த வேண்டும் ஆசிரியர் தினத்தில் நல்லா ஆசிரியர் விருது அவர் படித்த பள்ளியில் வழங்காமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம் என்று ஆசிரியர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்

மீண்டும் எப்போது ஆசிரியர் தின நிகழ்ச்சி திருத்தணியில் கொண்டாடப்படும் என்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்

தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

Tags

Next Story