சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி 388 மாணவிகளுக்கு சோளிங்கர் எம்எல்ஏ ஏ.எம் முனிரத்தினம் வழங்கினார்.

X
Ranipet King 24x7 |23 Dec 2025 10:11 PM ISTமேலும் தமிழக அரசு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு நல்ல நிலைக்கு வர வேண்டும் என பேசினார்.
சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி 388 மாணவிகளுக்கு சோளிங்கர் எம்எல்ஏ ஏ.எம் முனிரத்தினம் வழங்கினார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். சோளிங்கர் நகர மன்ற தலைவர் தழிச்செல்வி அசோகன், நகராட்சி கவுன்சிலர்கள் அசோகன் சிவானந்தம்,டி. கோபால், அன்பரசு, சுசீலா, வழக்கறிஞர் ரகு ராம்ராஜ், காங்கிரஸ் ஜெயவேல், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர். ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். இதில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம் முனிரத்தினம் அவர்கள் கலந்துகொண்டு 388 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர் மாணவிகள் மருத்துவர்களா கவோ, நீதிபதியாகவோ, பொறியாளராகவும், அறிவியில் அறிஞராகவோ, அரசியல் தலைவராகவோ, ஆசிரியர்களாகவோ வர தங்களுக்கு என்று ஒரு இலக்கை வைத்துக் கொண்டு பயின்று நல்ல நிலைக்கு வர வேண்டும். சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும். கடந்த கல்வியாண்டில் நம் பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இந்த கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும் தமிழக அரசு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு நல்ல நிலைக்கு வர வேண்டும் என பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
