ரூ 3.94 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை

ரூ 3.94 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை
X
எஸ். பி. வெங்கடேஷ்வரன் MLA தொடங்கி வைத்தார்
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், சாமிசெட்டிப்பட்டி முதல் ஜருகு வரையும், ஜருகு முதல் கடத்திக்குட்டை வரையிலான பழுதடைந்த தார்சாலையை அகலப்படுத்தி, மேம்படுத்தும் பணியை ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தில் ரூபாய் 3.94 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலையாக அமைக்க சாமிசெட்டிப்பட்டி மற்றும் ஜருகு ஆகிய இரு இடங்களில் பணிக்கான பூமிபூஜை விழா நடைபெற்றது. தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் சீனிவாசன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அருணா, பாமக மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் த.காமராஜ் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர்பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.
Next Story