புதுகை கீழ 4ஆம் வீதியில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை!

பொது பிரச்சனை
புதுகை கீழ 4ஆம் வீதி புதுகுளம் அருகே மாரியம்மன் கோவில் சந்திப்பு சாலையில் உள்ள தோரண வாய்க்காலில் கல் மண்ணை கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே மழைநீர் வந்தால் தடுத்து நிறுத்தப்பட்டு அந்த நீர் சாலையில் ஓடும் அவலம் ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அவ்வாறு நடக்காமல் இருக்க அந்த ஆக்கிரமிப்பை அகற்ற அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story