மருத்துவ சீட் மோசடி - 4 பேர் மீது வழக்கு

X

ஆரல்வாய்மொழி
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த ரூபன் (52). இவர் பிள்ளையார் குடியிருப்ப அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஜோகன் அக்ஷய் என்பவருக்கு வேலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (50) கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ் பேபி (52) ஆகியோர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய ரூபன் சேலம் அழகு சமுத்திரம் பகுதியை சேர்ந்த சாமுவேல் (40) அவரது மனைவி அமுதா (35) ஆகியோர் நடத்தி வருகின்ற ஏஞ்சல் பவுண்டேஷன் ட்ரஸ்ட் வங்கி கணக்கில் பல தவணைகளாக 2021 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 8 லட்சத்து 75 ஆயிரம் செலுத்தி உள்ளனர் ஆனால் இதுவரை மருத்துவ சீட்டு கிடைக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதையடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு ரூபன், சாமுவேல் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி கேட்ட போது அவர்கள் கெட்ட வார்த்தை பேசி பணம் கேட்டு வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக பூதப்பாண்டி ஜே எம் கோர்ட்டில் ரூபன் மனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி சாமுவேல், அமுதா, ராஜ்குமார், சுரேஷ் பேபி ஆகியோர் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story