நாகூர் 4-வது வார்டில் பணியாற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள்

நாகூர் 4-வது வார்டில் பணியாற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள்
X
மின் வாரிய ஊழியர்களுக்கு திமுக தீபாவளி பரிசு
நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவருமான என்.கௌதமன் வழிகாட்டுதலின்படி, நாகை நகராட்சிக்குட்பட்ட நாகூர் 4-வது வார்டில் பணியாற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கும், மின்சார துறை ஊழியர்களுக்கும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும், மாவட்ட பிரதிநிதியுமான நாகரெத்தினம், நாகராட்சி கவுன்சிலருமான அஞ்சலிதேவி ஆகியோர் வேஷ்டி, சட்டை, புடவை, கார, இனிப்புகளை தீபாவளி பரிசாக வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சியில், முன்னாள் கவுன்சிலர் அகமது சிராஜுதின், வட்ட பிரதிநிதி அப்துல் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story